;
Athirady Tamil News

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?

0

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், அதற்கான இறுதி அனுமதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்க வேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் கடும் பதற்றம் ஏற்பட்டது.

ஏப்ரல் 9ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமைதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யுரேனியம் செறிவூட்டலை ஈரான் நிறுத்தினால் அணுமின் திட்ட முதலீடு, பொருளாதாரத் தடைகள் தளர்வு மற்றும் முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து போர் நிறுத்த மீறல்களில் ஈடுபடுவதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தற்காப்பு நடவடிக்கைகளாகவே அவை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.