;
Athirady Tamil News

யாழில் பரபரப்பு ; பொலிஸ் துரத்தலில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

0

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் நேற்று (31) மாலை யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தகவல்களின் படி, யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை துரத்திச் சென்றபோது, துரத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, பொலிஸார் துரத்தி வந்த நபரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.