;
Athirady Tamil News

16 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடை! மீறினால் 2.5 மில்லியன் அபராதம்.அமுல்படுத்திய ஆசிய நாடு

0

மலேசிய அரசு 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது.

இணைய பாதுகாப்பு நடவடிக்கை
சமூக வலைதள பயன்பாடு தொடர்பில் இளம் வயதினருக்கான இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் உலகளாவிய முயற்சியில் மலேசியா இணைந்துள்ளது.

அதன்படி, 16 வயதிற்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதை தடுக்கும் விதிகளை, திங்களன்று மலேசிய அரசு அமுல்படுத்த தொடங்கியது.

இந்த விதிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டோக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட குறைந்தது 8 மில்லியன் பயனர்களைக் கொண்ட சமூக ஊடகத் தளங்களை பயன்படுத்த தடுக்கிறது.

மீறினால் 2.5 மில்லியன் டொலர்கள்
வயது சரிபார்ப்பு அமைப்புகளை செயல்படுத்தவும், 16 வயதிற்குட்பட்ட பயனர்களை கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்கவும் இந்த விதிகள் கட்டாயப்படுத்துகின்றன.

ஏற்கனவே கணக்கு வைத்துள்ள பயனர்களுக்கான வயது சரிபார்ப்பு நடைமுறை, அடுத்த 6 மாதங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று மலேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்தது.

மேலும், இந்த விதிமுறைகளை மீறினால் 2.5 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.