;
Athirady Tamil News

50 ஏவுகணை சுரங்கங்களை மீண்டும் திறந்த ஈரான்

0

ஈரான் தனது 69 நிலத்தடி ஏவுகணை சுரங்கங்களில் 50 சுரங்கங்களை மீண்டும் திறந்துள்ளது.

செயற்கைக்கோள் படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. இவை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்திருந்தன.

CNN வெளியிட்ட தகவலின்படி, ஈரான் பல இடங்களில் சுத்திகரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, சுரங்க நுழைவுகளை மீண்டும் செயல்படுத்தியுள்ளது. இந்த சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.

தாக்குதலால் சாலைகள், நுழைவுகள், ஏவுதள அமைப்புகள் சேதமடைந்தாலும், பாறைகளின் அடியில் இருந்த ஏவுகணைகள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை.

James Martin Center for Nonproliferation Studies ஆய்வாளர் சாம் லெயர் கூறியதாவது: “ஈரானுக்கு launchers மற்றும் launch குழுக்கள் இருக்கும் வரை, ஏவுகணைகளை பயன்படுத்துவதில் தடையில்லை” என்ரூ கூறுகிறார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையங்களையும் குறிவைத்து தாக்கியிருந்தன. ஆனால், போர்நிறுத்தத்திற்கு பிறகு, ஈரான் விரைவாக சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “ஈரானின் ஏவுகணை திறனை அழிப்பதே போரின் முக்கிய இலக்கு” என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால், ஈரான் மீண்டும் தனது நிலத்தடி சுரங்கங்களை திறந்து, தன்னுடைய இராணுவ திறனை நிலைநிறுத்தி வருகிறது.

இந்த முன்னேற்றம், மத்திய கிழக்கில் நிலவும் போரின் தீவிரத்தையும், ஈரானின் எதிர்ப்பு திறனையும் வெளிப்படுத்துகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.