;
Athirady Tamil News

யாழில் கோர விபத்து ; பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்

0

யாழ்ப்பாணத்தில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயங்கரமாக சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கோர விபத்தின் நேரடிச் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

திடீரென அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது வீதியில் சறுக்கியவாறே பல மீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்பட்டது.

அலறியடித்தபடி ஓடி வந்த பொதுமக்கள்
இந்த விபத்தின் போது ஏற்பட்ட உராய்வினால் வீதியில் தீப்பொறிகள் பறந்ததைக் காண முடிந்தது. விபத்து நிகழ்ந்த சத்தத்தைக் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடி வந்தனர்.

விபத்துக்குள்ளான நபரை மீற்பதற்காக, அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவினர். அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.