;
Athirady Tamil News

ஈரானுக்கு தடைகள் தளர்வு இல்லை ; அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

0

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு பதிலாக, ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் எவ்வித உடன்பாடும் எட்டவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதற்கான முதன்மைக் காரணியே அந்நாட்டின் அணுசக்தி நடவடிக்கைகளும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்புமே ஆகும்.

எனவே, ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிட ஒப்புக்கொண்டால் மட்டுமே, அந்த உடன்பாட்டின் அடிப்படையில் தடைகளில் தளர்வுகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.