;
Athirady Tamil News

நடுக்கடலில் நடந்த பரபரப்பு: கண் முன்னே காணாமல் போன கடற்றொழிலாளர்- தேடுதல் நடவடிக்கை தீவிரம்

0

புத்தளம் – வென்னப்புவ கடற்பரப்பில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் சுறா மீன் தாக்குதலுக்கு உள்ளானதில், ஒருவர் காணாமல் போனதுடன் மற்றொருவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்டுள்ளது.

அத்துடன், விபத்தில் காணாமல் போன கடற்றொழிலாளர் 26 வயதுடைய மனோஜ் தில்ருவன் பீட்டர்சன் என்றும் மகாவேவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுறா தாக்கியதில் காணாமல் போன இளைஞர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

படகின் தலைவர் உட்பட ஏழு கடற்றொழிலாளர்களுடன் சென்ற இழுவைப் படகு, ஏப்ரல் 24ஆம் திகதி வென்னப்புவவில் உள்ள வல்லேமன்கரை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்க புறப்பட்டது.

மே 30ஆம் திகதி, வலையில் சிக்கியிருந்த மிகப்பெரிய சுறா மீனை படகுக்குள் இழுத்து ஏற்ற முயன்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அந்த சுறா மீன் ஒரு கடற்றொழிலாளர் ஒருவரின் கைவிரலை கடித்து துண்டித்ததுடன், வலையிலிருந்து தப்பித்து மீண்டும் கடலுக்குள் விழுந்தது.

தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
இதையடுத்து ஏற்பட்ட பரபரப்பில், சுறாவிலிருந்து தப்பிக்க முயன்ற ஒரு கடற்றொழிலாளர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

கடலில் விழுந்த கடற்றொழிலாளரை காப்பாற்றுவதற்காக படகிலிருந்த கயிறுகளை வீசியதாக படகுத் தலைவர் தெரிவித்தார்.

எனினும், சுறாவிலிருந்து தப்பிக்க நீந்திச் சென்ற அந்த கடற்றொழிலாளர் கடும் அலைகளில் சிக்கி பின்னர் காணாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.