;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்

0

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி கடமையேற்ற ஏ. நளின் தர்சனவிற்கு களுத்துறை மாவட்டத்திற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலையம் இதுவரை காலமும் தனியார் வீடுகளில் இயங்கி வந்த நிலையில், தற்போது புதிதாக பொலிஸ் நிலையம் கட்டப்பட்டு புதிய பொலிஸ் நிலைய திறப்பு விழா எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

இந்த புதிய பொலிஸ் நிலைய கட்டட பணிகளை துரித கெதியில் கட்டி முடிப்பதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான நளின் தர்சன தீவிரமாக செயற்பட்டு வந்து நிலையில் , பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டவிருக்கும் நிலையில், குறித்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி இடமாற்றம் பெற்று சென்றிருந்த பிறடோஸ் நான்கு மாத கால பகுதிக்கு கூட முடியவடையாத நிலையில், மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று, கோப்பாய் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக கடமையேற்கவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.