மின்னல் தாக்கிய இண்டிகோ விமானம்., பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்
திரிபுராவின் நலைநகர் அகர்தலாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம், கொல்கத்தா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்தபோது மின்னல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமானம் ரன்வேயில் இருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. அதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விமானத்தின் வெளிப்புறத்தில் சிறிய சேதம் ஏற்பட்டாலும், அது பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இல்லை என கூறப்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
விமானத்தின் பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பிறகு, பயணிகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் அகர்தலாவுக்கு அனுப்பப்பட்டனர்.
விமான நிலைய அதிகாரிகள், “மின்னல் தாக்குதல் விமானங்களுக்கு அரிதானது அல்ல. ஆனால், விமானங்கள் இத்தகைய சூழ்நிலைகளுக்கு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முதல் முன்னுரிமை” என தெரிவித்தனர்.
இந்த சம்பவம், பருவமழை காலத்தில் விமானப் பயணங்களில் ஏற்படும் இயற்கை சவால்களை மீண்டும் வெளிப்படுத்துகிறது.