இதற்குப் பதிலளித்த புகையிரத திணைக்கள அதிகாரிகள், புகையிரத பாதைகள் தொடர்பான ‘மாஸ்டர் பிளான்’ அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும் எனவும், அதன் பின்னரே காணிகள் மற்றும் வீதிகள் விடுவிப்புத் தொடர்பில் இறுதி முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் வடக்கு மாகாண புகையிரத பாதைகள் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், குறுக்கறுக்கும் வீதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பிரதான வீதிகளுடன் இணைக்கும் சமாந்தர வீதிகளை அமைப்பதே விபத்துகளைத் தவிர்க்கும் சிறந்த வழிமுறை எனவும் தெரிவித்தனர்.
அதன் போது மூடப்பட்ட புகையிரத கடவைகளால் மக்கள் பல கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்லும் நிலை காணப்படுவதால், இது குறித்துக் கள ஆய்வு செய்து சில கடவைகளை விடுவிக்கவும், ஏனையவற்றிற்கு மாற்று வீதிகளை அமைக்கவும் புகையிரத திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளது.
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம்: பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களால் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.