உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் வடக்கு ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் சந்திப்பு
;
ஏற்கனவே உலக வங்கியால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு திட்டங்களின் நடைமுறைப்படுத்தல் களமட்டத்தில் எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பிலும், அதற்கான வேலைத்திட்டக் கால அட்டவணை தொடர்பிலும் ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கு உலக வங்கிக் குழுவினர் விரிவாக விளக்கமளித்தனர்.
இந்த முக்கிய கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.