;
Athirady Tamil News

சீனாவில் இலங்கையர்கள் சாதனை; வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை!

0

சீனாவில் மதிப்புமிக்க 2026 கோடைக்கால சமையல் கலைஞர்கள் போட்டியில் இலங்கை சமையல் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்று, சர்வதேச சமையல் துறையில் நாட்டின் பெயரைப் பொன்னெழுத்துக்களில் பொறித்துள்ளது.

இந்தப் போட்டி சீனாவின் கிங்டாவோவில் ஜூன் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. சீனா, ரஷ்யா,கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அஸர்பைஜான் போன்ற சக்திவாய்ந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.

பாரம்பரிய பால் சாதம் மற்றும் தேங்காய் ரொட்டி
தலைமை சமையல் கலைஞர் நிஷாத் சமரநாயக்க மற்றும் உதவி சமையல் கலைஞர் மனோஜ் லியனகே ஆகியோர் சீனாவின் பீய்ஜிங்கில் அமைந்துள்ள ஒரு இலங்கை உணவகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய பால் சாதம் மற்றும் தேங்காய் ரொட்டி உள்ளிட்ட பல இலங்கை சமையல் குறிப்புகளை அவர்கள் வழங்கினர்.

இலங்கை மசாலாப் பொருட்களால் சுவையூட்டப்பட்ட இந்த உணவுகள், உயர்மட்ட சீன சமையல் கலைஞர்கள் மற்றும் சர்வதேச உணவு நிபுணர்களிடமிருந்து பெரும் பாராட்டையும் புகழையும் பெற்றன.

அதெவேளை பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் நடைபெற்ற ஒரு சர்வதேச அளவிலான சமையல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று, சமையல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.