;
Athirady Tamil News

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் ; பெஞ்சமின் நெதன்யாகு

0

தேவைப்பட்டால் ஈரான் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்படுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்காசியாவில் பல மாதங்களாக நீடித்துவரும் பிராந்திய பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும், ஈரானும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

இந்த சூழலில், தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகவுள்ளது என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இது இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன என்பதை உணர்த்துகின்றது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியதாவது: ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்க இஸ்ரேல் தனித்துச் செயல்படும்.

ஈரானின் அணுகுண்டுகளிலிருந்து நாங்கள் எங்களைக் காப்பாற்றிக் கொண்டோம். தேவைப்பட்டால் இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும். இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.