;
Athirady Tamil News

நண்பன் வீட்டிற்கு சென்ற இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்

0

பாதுக்க, கலகெதர சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றின் வாயிலுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்ததாகக் கூறி, சிவில் உடையில் பொலிஸ் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் இளைஞன் ஒருவனை கொடூரமாக தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் காயமடைந்த இளைஞன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸில் முறைப்பாடு
பாதிக்கப்பட்ட இளைஞன் அலுபொத வீதி, அங்கமுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

கலகெதர பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்ற குறித்த இளைஞன், வீட்டின் முன்னால் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றிருந்தார்.மீண்டும் வந்தபோது, வீதியின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தக்கூடாது என்று கூறிய பொலிஸார், இளைஞனை மோட்டார் சைக்கிளுடன் பாதுக்க பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ளனர்.

இதற்கு இளைஞன் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பொலிஸார் அவரை கொடூரமாக தாக்கியுள்ளதாக அவர் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.