;
Athirady Tamil News

அமெரிக்க குடியேற்ற அதிகாரியால் வெளிநாட்டவர் சுட்டுக்கொலை

0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில், அந்நாட்டு குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மெக்ஸிகோ நாட்டைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா்.

அமெரிக்காவில் தகுந்த ஆவணங்களின்றி தங்கியிருப்பவா்களைக் கண்டறிந்து நாடு கடத்தும் சோதனையின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடவடிக்கையின்போது, லோரென்சோ சல்காடோ அரௌஜோ என்ற நபா் அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக அதிகாரி சுட்டதில் அவா் இறந்ததாகவும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது

ட்ரம்ப் நிா்வாகத்தின் புதிய குடியேற்றக் கொள்கை அமலாக்கத் திட்டம் தொடங்கியதில் இருந்து அதிகாரிகளுடனான மோதலில் நிகழும் 8-ஆவது மரணம் இதுவாகும்.

முந்தைய பல சம்பவங்களில் அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பின்னா் விடியோ ஆதாரங்களால் பொய்யென நிரூபிக்கப்பட்டன.

இதைச் சுட்டிக்காட்டி, இச்சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணைக்கு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.