யாழ்பாணத்திற்க்கு விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க வேலனை பகுதியில் இயங்கி வரும் நூடுல்ஸ், அரிசி, குரக்கன் உள்ளிட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோருடன் விஜயம் செய்து உற்பத்தி நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார்.
இதன்போது, தொழிற்சாலையின் தற்போதைய உற்பத்தி நடவடிக்கைகள், எதிர்கொள்ளப்படும் சவால்கள், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், சந்தைப்படுத்தல் மற்றும் வேலைவாய்ப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.