யாழில் குடும்ப பெண்ணின் வாழ்வை பறித்த சம்பவம் ; ஒருவர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் – சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சுன்னாகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் சுதுமலை, தாவடி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.