;
Athirady Tamil News

நாட்டில் ஆபத்தாக மாறும் டெங்கு நிலைமை ; அதிகரிக்கும் உயிரிழப்பு

0

நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோயாளர்கள்
அதற்கமைய, இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்தின் இதுவரை வரையான காலப்பகுதியிலும் மட்டும் 47,670 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இக்காலப்பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அந்த எண்ணிக்கை 43,132 ஆகும். அவற்றுள் அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர்.

கம்பஹாவில் 17,280 நோயாளர்களும், கொழும்பில் 16,213 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், நாட்டில் தற்போது 175 அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.