உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரிட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் இயற்கை பேரிடர் நிலைமை எதுவும் இல்லை என்பதால், க.பொ.த உயர்தரம் மற்றும் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர் முகாமைத்துவ மையம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சை
பரீட்சைகள் நடைபெறும் அட்டவணைகளுக்கு அமைய அந்த நாட்களில் விசேட காலநிலை மாற்றங்கள் எவையும் ஏற்படுவதற்கு இதுவரை காலநிலை எதிர்வுகூறல்கள் எதுவும் இதுவரை வெளியிடவில்லை.
ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.