;
Athirady Tamil News

வவுனியா புதுக்குளத்தில் ஶ்ரீ சித்திவிநாயகர் முன்பள்ளி திறந்து வைப்பு!

0

வவுனியா புதுக்குளத்தில் ஶ்ரீ சித்திவிநாயகர் முன்பள்ளி திறந்து வைப்பு!

வவுனியா, புதுக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் முன்பள்ளியானது வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திரவினால் திறந்து வைக்கப்பட்டது.

பாலாவின் அறக்கட்டளையின் ஸ்தாபகரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளருமான பா.பாலேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் போது முன்பள்ளி சிறார்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளிப்பும் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்டச் செயலாளர் நா.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் மற்றும் வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.செல்ரன்யூடிட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், முன்பள்ளி சிறார்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.