;
Athirady Tamil News

நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

0

நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற 14 வயது சிறுவன் , மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் அநுராதபுரம், திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோடாமடுவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது. தோடாமடுவ, திறப்பனை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று குறித்த சிறுவன் தனது நண்பர்கள் சிலருடன் தோடாமடுவ வயல்வெளிக்குச் சென்று பட்டம் விட்டுக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுப்பதற்காக மரத்தில் ஏறிய நிலையில், எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அநுராதபுரம், திறப்பனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.