;
Athirady Tamil News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இறுதிக்கட்ட தோ்தல்

0

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிராந்திய சட்டப்பேரவைக்கான 3-ஆம் கட்ட தோ்தல், கடும் வன்முறை மற்றும் கள்ள ஓட்டு புகாா்களுக்கிடையே திங்கள்கிழமை நடைபெற்றது.

பூஞ்ச் பிரிவில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு காரணமாக 7 தொகுதிகளில் தோ்தல் ஏற்கெனவே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பாக் மற்றும் அவேலி மாவட்டங்களின் 4 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இப்பகுதிகளில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தோ்தல் ஆணையம் எச்சரித்திருந்தபடி, பல இடங்களில் ஆளும் பிஎம்எல்-என் மற்றும் பிபிபி கட்சித் தொண்டா்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன.

வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்ல வேண்டிய வாக்காளா்கள், தோ்தல் அதிகாரிகள் மற்றும் முகவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பிபிபி முகவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

முன்னதாக, முதல் மற்றும் இரண்டாம் கட்ட தோ்தல்களும் வன்முறை, முறைகேடு புகாா்களுக்கிடையேதான் நடந்து முடிந்தன. இந்த 2 கட்ட தோ்தல்களில் நவாஸ் ஷெரீஃப்பின் பிஎம்எல்-என் கட்சி பெரும்பான்மை பெற்று, முன்னிலையில் உள்ளது.

இந்தச் சட்டப்பேரவையில் அகதிகளுக்கான தொகுதிகளை ரத்து செய்யக் கோரி ‘ஜேஏஏசி’ அமைப்பினா் நடத்திய தொடா் போராட்டங்களால் பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிலவி வருகிறது. அரசின் கடும் அடுக்குமுறையில் பொதுமக்கள் பலா் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.