;
Athirady Tamil News

சொல்லாதே யாரும் கேட்டால்….கிசுகிசு விற்று 2 வீடுகள் வாங்கிய மூதாட்டி! இணையவாசிகள் திகைப்பு

0

கிசுகிசு விற்று மூதாட்டி ஒருவர் 2 வீடுகள் வாங்கிய சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது. கொலம்பியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவரே இவ்வாறு கிசுகிசுக்களை விற்று இரு வீடுகளை வாங்கியுள்ளார்.

கொலம்பியாவை சேர்ந்த மிர்யம் என்கிற ஒரு மூதாட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கும் சுவாரசியமான கிசுசுக்கள் அதாவது மற்றவர்களின் ரகசியங்களையும் அருகில் வசிப்பவர்களிடம் கேட்டு பெறுவார்.

 கள்ளக்காதல் விவகாரம் என்றால்  அதிக தொகை

அதன்பின் அதை ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்வார். அதன்பின் சம்மந்தப்பட்டவரிடம் அதை சொல்லி அதை வெளியில் சொல்லாமல் இருக்க கிசுகிசுவுக்கு ஏற்ற மாதிரி பணம் வசூலித்து வந்திருக்கிறார்.

இதில், கள்ளக்காதல் விவகாரம் என்றால் அதற்கு அதிக தொகையை வசூலித்திருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவெனில், அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் இரண்டு வீடுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.

சிலர் அவருக்கு 7 லட்சம் வரை கூட பணம் கொடுத்திருக்கிறார்களாம். இது குறித்து அந்த மூதாட்டி சமீபத்தில் மிர்யம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியும் கொடுத்துள்ளதாக  கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.