;
Athirady Tamil News

அம்பாறையில் தாவித்தாவி போதைப்பொருள் விற்ற ஸ்பைடர் வுமன்!

0

அம்பாறை- சாய்ந்தமருதுப் பகுதியில் கட்டிடங்களின் மாடிகளுக்கு இடையே சிலந்தி போல் தாவித் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததன் காரணமாக ஸ்பைடர் வுமன் என்றழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். அவர், நீண்டகாலமாக ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்து வருபவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர்
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, பெண் பொலிஸாரின் உதவியுடன் மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

கைது செய்ய முற்பட்டபோது, மாடிகளிலிருந்து தொடர்ச்சியாகக் குதித்ததன் காரணமாக பெண்ணின் காலில் முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணை போதைப்பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.