;
Athirady Tamil News

கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி; பலர் காயம்

0

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஓட்டல் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் பலர் வந்து நேரில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கொல்கத்தாவின் பரபரப்பான பகுதியில் நடந்த இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை கூறியதாவது: மத்திய கொல்கத்தாவின் மிர்சா காலிப் பகுதி மக்கள் நெருக்கடி மிகுந்தது. இங்கு மிகவும் பழைய கட்டிடத்தில் ஓட்டல் ஒன்று இயங்கிவந்தது.

குறிப்பிட்ட அந்த ஓட்டலில் வங்கதேசம், மேகாலயா, அதில்புர்தூர் பகுதிகளைச் சேர்ந்த பலரும் மருத்துவ சிகிச்சைக்காக வந்து தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டது.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். நெருக்கடியான கட்டிடம், விபத்து ஏற்பட்டால் வெளியேறுவதில் இருக்கும் சிக்கலால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு. விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை. இவ்வாறு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணத்தை அறியும் வகையில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டல் உரிமையாளர்களை போலீஸ் கைது செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.