;
Athirady Tamil News

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: இந்திய மாணவர் படுகாயம்

0

மாஸ்கோ,

உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய மாணவர் படுகாயம்
இந்நிலையில், ரஷியாவின் பஷ்கொர்டோஸ்தன் மாகாணம் உபா நகரில் உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மாணவர் படுகாயமடைந்தார். இந்திய மாணவர் உபா நகரில் உள்ள மருத்துவ கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய மாணவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.