;
Athirady Tamil News

காணிப்பிரச்சனை தொடர்பில் ஆராய்வு

0

தனியார் காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு–கிழக்கின் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
 
உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையிலும், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கைகள் ஊடாகவும் தமது பூர்வீக காணிகளை இழந்துள்ள மக்களை ஒருங்கிணைத்து, அவர்களின் காணி உரிமைக்காக எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த வகையில் செயற்படுவதற்கான முக்கிய கலந்துரையாடலாக இது அமைந்தது.

காணிகளை இழந்த மக்களின் குரலாகவும், அவர்களின் உரிமைகளுக்கான பொதுவான அமைப்பாகவும் செயற்படும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “ஒன்றுபட்ட அமைப்பு” ஊடாக இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

காணி அபகரிப்பு, காணிகளுக்குள் மக்கள் மீள்குடியேறுவதற்கான தடைகள், வனவள மற்றும்u தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் பொதுமக்களின் பாரம்பரிய காணிகள் ஆக்கிரமிக்கப்படுதல், உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் காணிகளை இழந்த மக்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதிநிதிகள் விரிவாக ஆராய்ந்தனர்.
.
You might also like

Leave A Reply

Your email address will not be published.