;
Athirady Tamil News

சென்னையை உலுக்கிய பயங்கரம் ;பிரியாணி அண்டாவில் பெண் சடலம் ; வாலிபர் கைது… யுவதிக்கு வலைவீச்சு

0

சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் , சந்தேக நபரான இளைஞர் மணிப்பூரில் கைது செய்யப்பட்ட நிலையில், யுவதி தலைமறைவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் ஒரு ரயிலில் ரத்தக்கரையுடன் ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு பெண்ணின் தலை மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.

மணிப்பூரில் வைத்து தமிழக பொலிஸார் கைது
அதிர்ச்சி அடைந்த பொலிஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் அந்த சூட்கேஸை ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்கள் கூடுவாஞ்சேரி பகுதியில் தங்கி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிரியாணி சமைக்கும் பாத்திரத்தில் வைக்கப்பட்டு உடலோடு மாவு. காய்கறிகளை சேர்த்து அவர்கள் வேகவைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்த இளம்பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த வாலிபரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த வீட்டில் அவருடன் தங்கியிருந்த ஹைதுல் நிஷா என்கிற பெண்ணை அவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதோடு அவர்கள் இருவரும் ஒடிசாவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, சென்னையில் இருந்து தனிப்பட்ட அங்கு சென்று அவர்களை தேடி வந்த நிலையில் அசாமை சேர்ந்த மாணிக் லஸ்கரை மணிப்பூரில் வைத்து தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இளம் பெண்ணை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.