;
Athirady Tamil News

சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி

0

ஸ்டாக்ஹோம்,

ஐரோப்பிய நாடான சுவீடனில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள மொத்தம் 349 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலை யில், ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே நூலிழையில் கடுமையான போட்டி நிலவியது. இறுதி முடிவுகளின்படி, தற்போதைய பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனின் கூட் டணி 173 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியைப் பறிகொடுத்தது.

அதேசமயம், முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ் டர்சன் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு அமைவதற்கு வழிவகை செய்யும் பொருட்டு, தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவர் சமர்ப்பித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.