;
Athirady Tamil News

நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் உயிரிழப்பு

0

கொஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் 1990-ம் ஆண்டு முதல் மதுவிலக்குச் சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மொகோக்சுங் மாவட்டத்தில் 8 பேர், துயென்சாங் மாவட்டத்தில் 11 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய, மது மாதிரிகள் குவாஹாட்டியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அடையாளம் தெரியாத, லேபிள் இல்லாத சட்டவிரோத மது வகைகளை அருந்துவதைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மது அருந்திய பிறகு தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. போலீஸார் நடத்திய சோதனையில் இதுவரை 3 ஆயிரம் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.