முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரிடமிருந்து தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்காக வழக்கை நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.