லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)
லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)
#################################
லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந் தனது பிறந்தநாளை தாயக உறவுகளோடு மகிழ்ந்து கொண்டாடினார்
புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் திரு.திருமதி பரமகுமரன் விஜயகுமாரி (ரோகிணி) தம்பதிகளின் ஏகபுத்திரன் செல்வன்.கிஷாந் அவர்களின் இன்றைய பிறந்ததினத்தை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கொண்டாடியது
புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்ட, லண்டனில் அமரத்துவ மடைந்தவர்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் மூன்றாவது புதல்வியான லண்டனில் வசிக்கும் ரோகினி என அழைக்கப்படும் திரு.திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏகபுத்திரன் செல்வன் கிஷாந் அவர்களின் இன்றைய பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விரும்பி கேட்டுக் கொண்டதற்கமைய இன்று தாயக கிராமமொன்றில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் பெருமளவிலான மாணவர்கள், ஒன்று கூடி செல்வன்.கிஷாந் அவர்களின் பிறந்த நாளை பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி சந்தோசமாக கொண்டாடினார்கள்..
அதேவேளை செல்வன்.கிஷாந் அவர்களின் பெற்றோர்களான திரு.திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகள், தங்களின் ஒரே புதல்வனின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு மாணவர்களுக்கு உதவிகளை வழங்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் வேண்டுகோள் விடுத்ததின் பயனாக இன்றைய நாளில் லண்டன் கிஷாந் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட மாலைநேர வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில், மாணவர்கள் பெற்றோர்கள்,மகளிர் அமைப்பினர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பிறந்த நாள் கேக் உட்பட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு மாணவர்களின் நன்றியுரையுடன் லண்டன் கிஷாந் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் இனிதாக நடைபெற்றது.
இன்றைய நாளில் லண்டன் மாநகரில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன் கிஷாந்த் பரமகுமரன் அவர்களுக்கு, “பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,
செல்வன்.கிஷாந்த் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பெற்றோர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் உதவிகள் வழங்கி வைத்தமைக்காகவும் மதிப்புமிகு நன்றியினையும் தாயக சொந்தங்களோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
04.10.2026
லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos