;
Athirady Tamil News

அமெரிக்காவில் முன்னாள் ராணுவ மேஜருக்கு மரண தண்டனை: டிரம்ப் ஒப்புதல்

0

வாஷிங்டன்,

கடந்த 2009 ஆம் ஆண்டு டெக்சாஸில் உள்ள போர்ட் ஹூட் ராணுவ முகாமில் 13 பேரைக் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான முன்னாள் அமெரிக்க ராணுவ மேஜர் நிடால் ஹசனுக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்ற ராணுவச் செயலாளர் பீட் ஹெக்செத் அளித்த பரிந்துரைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது 1961 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தால் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனையாக அமையும். கன்சாஸில் உள்ள ராணுவச் சிறையிலிருந்து இண்டியானாவில் உள்ள பெடரல் சிறைக்கு இவரை மாற்றி தண்டனையை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவக் கொள்கையின்படி, அதிபரின் ஒப்புதல் கிடைத்த 60 நாட்களுக்குப் பிறகும், 150 நாட்களுக்குள்ளும் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.