;
Athirady Tamil News

மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தில் பாடசாலை விட்டு வீடு திரும்பிய ஆசிரியை டிப்பர் மோதி பலி – ஏற்றிச்சென்ற அதிபருக்கு படுகாயம்

0

மட்டக்களப்பு திமிலைதீவு புதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை கொண்டாடிவிட்டு பாடசாலை விட்டு அதிபரின் மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியை மற்றும் அதிபர் பயணித்த மோட்டார்சைக்கிள் மீது மணல் ஏற்றிவந்த டிப்பர் மோதியதில் குறித்த ஆசிரியை சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். அதிபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தினமான இன்று பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ் துயரகரமன நிகழ்வு நடந்துள்ளது.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு சூரியா லேனைச் சேர்ந்த 58 வயதான திருமதி மதிவதனி கமலநாதன் எனும் ஆசிரியை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆசிரியை 30 வருடங்களுக்கு மேல் ஆசிரிய சேவையை புரிந்தவர் என்பதுடன் தற்போது மட்/ வலையிறவு மெதடிஸ்த மிஷன் தமிக் கலவன் பாடசாலையில் ஆசிரியையாக பணி புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளிலும் கடந்த காலங்களில் பணிபுரிந்துள்ளார்

விபத்தை ஏற்படுத்திய மணல் ஏற்றிவந்த கனரக டிப்பர் சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு அமைதியின்மையும் ஏற்பட்டது

பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் நிறைவடையும் வேளையிலும் இப் பிரதேசத்தினூடாக மணல் டிப்பர்களின் போக்கு வரத்து அதிகரித்துள்ளது. தினமும் ஆசிரியர்களும் மாணவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டே இவ் வீதிகளால் பயணிக்கின்றனர். குறிப்பாக வலையிறவு மற்றும் மண்முனை பாலங்களை அண்மித்த வீதிகளில் இந் நிலையினை அவதானிக்க முடிகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த ஆசிரியையின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

கடோ கபு

You might also like

Leave A Reply

Your email address will not be published.