;
Athirady Tamil News

பீகாரின் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 13 சிறுவர்கள் உயிரிழப்பு

0

பீகாரின் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பீகாரில் படகு விபத்தில் 13 சிறுவர்கள் உயிரிழப்பு
பீகாரின் வைஷாலி மாவட்டம், ராம்பூர் ஷியாம்சந்த் கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில், கங்கை ஆற்றின் மறுகரையில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள படகில் சென்றுகொண்டிருந்தனர்.

ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவலறிந்த பக்கத்து கிராமத்து மக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

தற்போது வரை படகு உரிமையாளர்கள் உட்பட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 15 வயதுக்குட்பட்டவர்கள். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி அறிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.