நுரைச்சோலை மூன்று மின் பிறப்பாக்கிகளும் செயலிழப்பு !
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார விநியோகத் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் தற்போது செயலிழந்துள்ளதாக அந்த மின் நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேசிய மின் அமைப்புச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மின்வெட்டை தொடர்ந்து நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ள நிலையில் கூரை மீது சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்புகளைக் அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.