;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய சேவை ஆரம்பம்!

0
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அ. கிருபாகரன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இச் சேவையினை யாழ்ப்பாண மாவட்ட செயலர், மருதலிங்கம் பிரதீபன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் மூலம், புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்காகப் பொதுமக்கள் வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை குறைக்கப்படுவதுடன், அரச சேவைகளை மக்களுக்கு அண்மையில் கொண்டு செல்லும் நடவடிக்கையும் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந் ஆரம்ப நிகழ்வில் மாவட்டச் செயலக பிரதம எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் கே. திருக்குமார், பிரதம வாகனப் பரிசோதகர், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.