பட்டப்பகலில் நண்பர் மீதே காரை மோதிக் கொன்ற நபர்: பொலிசில் சரண்
பட்டப்பகலில் தன் நண்பர் மீது காரை மோதி, இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளார் ஒருவர்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், தன் நண்பர் மீதே காரை மோதிக் கொன்ற ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
பட்டப்பகலில் நண்பர் மீது காரை மோதிய நபர்
நேற்று முன் தினம், தேவேஷ் என்னும் பன்டி தீக்ஷித் (36), தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, அவரை தன் காரில் பின்தொடர்ந்த பவன் ப்ரஷார் (22) என்பவர், அவரது மோட்டார் சைக்கிள் மீது தனது காரைக்கொண்டு மோதியுள்ளார்.
கார் மோதிய வேகத்தில், மோட்டார் சைக்கிள் சுமார் 150 அடி தூக்கி வீசப்பட, காரிலிருந்து இறங்கிய பவன், தேவேஷை இரும்புக் கம்பி ஒன்றினால் தாக்கியுள்ளார்.
பட்டப்பகலில் மக்கள் அதிர்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க, சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் தேவேஷ்.
அதைத் தொடர்ந்து, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார் பவன்.
முதல் கட்ட விசாரணையில், தாங்கள் இருவரும் வெவ்வேறு பார்களில் பவுன்சர்களாக வேலை செய்து வந்ததாகவும், நண்பர்களாக இருந்தவர்கள், பின்னர் தொழில் மற்றும் பணம் காரணமாக எதிரிகளாக மாறியதாகவும் பவன் தெரிவித்துள்ளார்.
பொலிசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.