;
Athirady Tamil News

பல மாவட்டங்களின் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

0

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டம்: புலத்சிங்கள, தொடங்கொட

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை, நோர்வூட்

இரத்தினபுரி மாவட்டம்: ஓபநாயக்க, அயகம, குருவிட்ட, பெல்மடுல்ல, எலபாத்த

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.