;
Athirady Tamil News

அமெரிக்கா: பிக்கப் லாரிக்குள் புகுந்து பீர் மற்றும் தின்பண்டங்களைத் திருடிய 4 கரடிகள்!

0

வாஷிங்டன்,

அமெரிகாவில் தம்பதி ஒருவரின் டிரக் வாகனத்திற்குள் புகுந்த 4 கருப்பு கரடிகள், அங்கிருந்த பீர் மற்றும் தின்பண்டங்களை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரக்கிற்குள் புகுந்த கரடிக் குடும்பம்

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள காட்லின்பர்க் பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் தங்களது செவ்ரோலெட் பிக்கப் டிரக் வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்து, வீட்டின் முன் நிறுத்தியுள்ளனர். அவர்கள் பொருட்களை வீட்டிற்குள் எடுத்து வைப்பதற்குள், அங்கு வந்த ஒரு தாய் கருப்பு கரடியும் அதன் மூன்று குட்டிகளும் டிரக்கின் கதவைத் திறந்து உள்ளே புகுந்தன.

பீர்- தின்பண்டங்கள் திருட்டு

டிரக்கிற்குள் தேடுதலில் ஈடுபட்ட கரடிகள், முதலில் அங்கிருந்த தின்பண்டங்கள் அடங்கிய பையை வெளியே இழுத்தன. அதைத்தொடர்ந்து, காரில் இருந்த சிக்ஸ்-பேக் பீர் பாட்டில்களையும் லாவகமாகத் திருடிக்கொண்டு தப்பியோடின.

வைரலாகும் வீடியோ

இந்த விநோதமான திருட்டுச் சம்பவத்தை அந்த பகுதியில் வசிக்கும் ‘பாம் கான்லி’ என்ற பெண் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். கரடிகள் மனிதர்களைப் போல காரின் கதவைத் திறந்து பொருட்களை திருடிச் செல்லும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இதையடுத்து வனப்பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள் தங்களது வாகனங்களின் கதவுகளை எப்போதும் பூட்டி வைக்குமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.