இன்றைய வானிலை: நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இன்று மழையுடனான வானிலை தற்காலிகமாக குறைவடைந்து காணப்படும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-11-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் முல்லைத்தீவு மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
பனிமூட்டமான நிலை
மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.