;
Athirady Tamil News

என் நண்பர் பிரதமர் மோடி மிகவும் மதிக்கப்படும் மாபெரும் தலைவர் – டிரம்ப்

0

மணிலா,

கடற்பயண சுதந்திரம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் ‘குவாட்’ மாநாடு நடந்தது. பிரதமர் மோடி, அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப். ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாடு முடிந்த பிறகு, தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தன்னிச்சையான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மூலம் பொருளாதார நெருக்கடி அளிக்கப்படுவது கவலை அளிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், வெளிப்படையான, பாதுகாப்பான, கடல்சார் வழித்தட பாதைகளை உறுதி செய்ய நாம் இணைந்து பாடுபட வேண்டும். முக்கியமான வினியோக சங்கிலிகளை பாதுகாத்து வருகிறோம். கடற்பயண சுதந்திரத்தை பாதுகாத்து வருகிறோம். நம்பகமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம்.

ரோந்து விமானங்கள்

வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குவாட் வர்த்தக தலை வர்கள் மாநாடு நடைபெறும். நமது கடல்களை பாதுகாக்க அடுத்த ஆண்டு பி-8, பி-3சி ஆகிய ரோந்து விமானங்கள் பறந்து சென்று முதல்முறையாக கடல்சார் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். தற்போதைய நிலையை மாற்ற வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்ப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியாவை பொறுத்தவரை ‘குவாட்” அமைப்பு ஒரு ஆக்கப்பூர்வமான, நம்பகமான கூட்டமைப்பு” என்று கூறினார்.

மாபெரும் தலைவர்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசியதாவது:-

பிரதமர் மோடி என் நண்பர். மிகவும் மதிக்கப்படும் மாபெரும் தலைவர். உறுப்பு நாடுகளிடையே பொருளாதார பாதுகாப்பை ‘குவாட்’ வலுப்படுத்தி வருகிறது.நமது பொருளாதார ஒத்துழைப்பை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல முதல்முறையாக குவாட் வர்த்தக தலைவர்கள் மாநாடு நடத்துவோம்.

நமது வினியோக சங்கிலித்தொடரை பாதுகாக்க முக்கிய கனிம ஒப்பந்தங்களை செய்துள் ளோம். எந்த ஒரு வெளிநாட்டு வினியோகஸ்தரின் நிர்பந்தத்துக்கும் எந்த நாடும் அடிபணியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.