;
Athirady Tamil News

பிரித்தானியாவில் ‘வரலாற்று தலைவனின் வழிகாட்டலில்’ நூல் வெளியீடு!

0

பிரித்தானியாவில் ‘வரலாற்று தலைவனின் வழிகாட்டலில்’ நூல் வெளியீடு!

வரலாற்று தலைவனின் வழிகாட்டலில்’ நூல் வெளியீடும் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வும் பிரித்தானியாவில் உணர்வு எழுச்சியுடன் இடம்பெற்றது.

தமிழர் கலை பண்பாட்டு நடுவத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலக தமிழர் வரலாற்று மையத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

மாவீரர் தினத்தினை முன்னிட்டு இந் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், விடுதலை புலிகளின் பத்திரிகை ஆசிரியர் சு.ரவி அவர்களின் பத்திரிகைப் படைப்புகளின் ஆவண நூல் அறிமுகமும் இதன்போது இடம்பெற்றது.

வரலாற்று தலைவனின் வழிகாட்டலில்.. மற்றும் தமிழர் படையின் சாதனை சமர்கள் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாநிதி பிரபாகரன் படைத்துறை ஆய்வாளர் அவர்களின் உரை, அரசியல் பொருளாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அறிமுக உரை என்பன இடம்பெற்றதுடன், 25 வருட காலத்திற்கு மேலாக விடுதலை புலிகளின் ஈழநாதம் பத்திரிகையில் கடமை ஆற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஸ்ரீசாந்தினி சிவா அவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

இதில் புலம்பெயர் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.