;
Athirady Tamil News

காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்; மந்திரி உள்பட 8 பேர் பலி

0

காசா நகரம்

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மந்திரி உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலின்போது, அந்த அமைப்பினர் பலரை துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் படுகொலை செய்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

இதன்பின்னர், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்தது. இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது. இதில், உயிருடன் இருந்தவர்களை உடன்படிக்கை அடிப்படையில் மீட்டது. உயிரிழந்த பணய கைதிகளின் உடல்களையும் திரும்ப பெற்றது.

ஐ.நா. அமைப்பு தடை

இந்த சூழலில், போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக, ஹமாஸ் அமைப்பை ஐ.நா. அமைப்பு தடை செய்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காசா முனையின் மத்திய பகுதியில் டெயிர் அல்-பலா நகரில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் பலியாகி உள்ளனர்.

கல்வி மந்திரி

இதில், அடுக்குமாடி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணை கல்வி மந்திரி காலித் அபு நடா மற்றும் அவருடைய மனைவி உயிரிழந்தனர். இதுதவிர, துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, கடந்த மாதத்தில், ஹமாஸ் பயங்கரவாதிகள் 80 பேரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்துள்ளது.

எந்தவொரு பயங்கரவாதியும் வலிமை படைத்தவராக இருக்க முடியாது. ஹமாஸ் தலைமைத்துவத்தில் இருக்கும் யாரும் எங்களிடம் இருந்து தப்பி செல்ல முடியாது என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.