;
Athirady Tamil News

தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)

0

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பொலிஸார், பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

அதனை ஓர் ஓரத்தில் நிறுத்திவைத்துவிட்டு, தலைக்கவசத்தை கழற்றி வீதியில் வீசிவிட்டு, “அரகலயட்ட ஜயவே வா” (​போராட்டத்துக்கு வெற்றி) எனக் கோஷமெழுப்பி, ஆர்ப்பாட்டத்துடன் கைக்கோர்த்துக்கொண்டார்.

பொலிஸ் மோட்டார் சைக்கிள் அவ்விடத்திலேயே நிற்கிறது. தலைக்கவசம் கீழே விழுந்து கிடக்கிறது.

பொலிஸ் அதிகாரியோ, போராட்டக்காரர்களுடன் கைகோர்த்து கொழும்பை நோக்கி வந்துகொண்டிக்கின்றார்.

அவர், மஹரகமவில் வைத்தே, போராட்டக்காரர்களுடன் இணைந்துகொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.