;
Athirady Tamil News

“கார்த்திகைப்பூவும், கனடா ஐயப்பன் கோயிலும்”.. ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை! ஒழியட்டும் நரிக்கூட்டம்! (அறிக்கை)

0

“கார்த்திகைப்பூவும், கனடா ஐயப்பன் கோயிலும்”.. ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை! ஒழியட்டும் நரிக்கூட்டம்! (அறிக்கை)

“ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை! ஒழியட்டும் நரிக்கூட்டம்!” எனும் தலைப்புடன், கனடாவில் இருந்து “அதிரடி” இணையத்துக்கு கிடைத்த அறிக்கையை நாம் பகிரங்கப்படுத்தி உள்ளோம். (தெரிவிப்பது நாம், தீர்மானிப்பது நீங்கள்)
§§§§§§§§§§§§§§§§§§§

தன் மானமும், இனமானமும் வேறு வேறு அல்ல என்பதிலும், எம் தேச விடியலுக்காய் தம் உயிர் ஈந்த எம் மாவீரச் செல்வங்களை மறத்தலும் – பெற்ற தாயை இகழ்வதும் வேறு வேறு அல்ல என்பதிலும் “மிக்க ” அசையா நம்பிக்கை கொண்டோராய் திகழும் அன்பார்ந்த கனடிய தமிழ் உறவுகளே – உங்கள் திருப்பாதம் தொட்டும் உம்மை வணங்கி, இன்று நம் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு இன வரலாற்று துரோகத்தையும் உங்கள் பார்வைக்கு வெளிக் கொணருகின்றோம்.

ஆம்! வளர்த்த கடாவே மார்பினில் பாய்வதை போலும், உங்கள் பணத்தில் உங்கள் உழைப்பில் – உங்கள் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இலக்கம் 635 Middlefield வீதியில் அமைந்துள்ள கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் இங்குள்ள ஸ்ரீலங்கா தூதரகத்துடன் இணைந்து கார்த்திகை பூ உள்ளிட்ட நமது தேசிய அடையாளங்களையும், தேசிய நிகழ்வுகளையும் தடை செய்தும், இதனூடே உங்கள் தேசியம் சார்ந்த உணர்வுகளில் இருந்தும் அப்புறப்படுத்தும் நிகழ்வுகள் கன கச்சிதமாய் ஆரம்பிக்கப்பட்டும் உள்ளது.

இதைத் தட்டிக் கேட்கவும், தடைகளை தகர்க்கவும், இத்தகைய துரோகங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதும் வரலாற்று கடப்பாடாகும். அதற்கான துணிவும், அதற்கான தார்மீக உரிமையும் உங்களிடம் மட்டுமே உள்ளது. ஆதலால் இதை செய்வீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடுமே இதையும் இங்கே வெளிக் கொணருகின்றோம்.

விடயம் இதுதான் —

கடந்த 16 ஆம் திகதி கார்த்திகை மாதம் (2021) இந்து ஐயப்பன் ஆலய அறங்காவலர் சபையினர், சிறந்த இன உணர்வாளரும் பூக்கடை உரிமையாளரும் ஆகிய திரு. கார்த்திக் நந்தகுமார்
அவர்களை அணுகி கனடிய டொலர் $2000.00 செலுத்தி ஒரு நாள் பூஜையை பொறுப்பெடுக்குமாறு கேட்டுள்ளனர்! இவர்களின் வேண்டுதலை ஏற்று இந்த அன்பரும் அதற்கான பணத்தை செலுத்தி கார்த்திகை 25 ஆம் தேதிக்கான பூசையை பொறுப்பெடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் அவர் ஐயப்பனுக்கு மலர் அலங்காரத்தை செய்து பூசை அன்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் ஆலய குருக்களிடம் கொடுத்துள்ளார். இதை பெற்றுக் கொண்ட குருக்களும் அதை அளவு சரி பார்த்து ஐயப்பனுக்கும் ஏற்ற அளவில் சிறிது மாற்றம் செய்து எல்லாம் சரியாக உள்ளது என்று கூறி அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்

இதற்கிணங்க இந்த உபயகாரரும் வீடு சென்று குளித்துவிட்டு 6 மணிக்கு ஆலயத்திற்குச் சென்று தெர்ப்பை தரித்து பூசைக்கு தயாராகியுள்ளார். பூசை நெருங்கும் வேளை அந்த ஆலயத்தில் பணிபுரியும் ஒருவர் இவருக்கு ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

அது என்னவெனில் ஐயப்பனுக்கு சாத்தவென குருக்களிடம் இவர் ஒப்படைத்த மலர் அலங்காரம் குப்பை தொட்டியில் போட்டு விட்டார்கள் என்று கூறினார். இதைக் கேட்டதும் அதிர்ந்து போன இந்த உபயகாரர், ஆலய குருக்களிடம் “ஐயா மலர் அலங்காரத்திற்கு என்ன நடந்தது. அதை ஏன் குப்பைத்தொட்டியில் போட்டார்கள்?” என வினவினார். அதற்கு அந்த குருக்கள் “தம்பி நான் இந்த ஆலயத்தில் வரும் அர்ச்சகர் தான். இங்கு அனைத்துக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் ஆலய அறங்காவலர் சபைக்கு தான் உண்டு. நீங்கள் அவர்களிடம் தான் சென்று தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

அதன்பின்னர் ஆலயத்தின் காரியாலயத்திற்கு சென்று “என்ன நடந்தது?” என்று விசாரித்துள்ளார். அதற்கு தலைவர் K. தம்பிராஜா அவர்கள் “இந்த மலர் அலங்காரம் கார்த்திகை பூக்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் நாங்கள் இதனை ஆலயத்தில் பயன்படுத்த மாட்டோம்” என்று பதிலளித்தனர்.

இவர்களின் பதிலை கேட்டு அதிர்ந்து போன உபயகாரர் திரு. கார்த்திக் “கடந்த 3 மணித்தியாலங்களாக தனக்கு ஏன் இதுபற்றி தெரியப்படுத்தவில்லை?” என கேட்டுள்ளார். அதோடு “கடந்த ஆண்டு கூட ஆலய பக்தர்கள் இதே கார்த்திகைப் பூவை பயன்படுத்தினார்களே, இதை ஏன் இம்முறை பயன்படுத்தக்கூடாது என்று கூறுகின்றீர்கள்?” என்று வினவினார். மேலும், “பிளாஸ்டிக் பூக்கள் கொண்டு செய்து அலங்காரங்கள் வைக்கும் நீங்கள் ஏன் இதை வைக்க கூடாது?” என்று கேட்டுள்ளார். அதோடு, “கார்த்திகை பூ வைக்க கூடாது என்று எதாவது சமய விதிகள் இருக்கிறதா?” என்றும் கேட்டுள்ளார்.

இதைக் கேட்டவுடன் கோபத்தின் உச்சிக்குச் சென்ற தலைவர் “நீங்கள் கொண்டு வரும் அனைத்து குப்பையையும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு இல்லை” என்று பதிலளித்தார்.

செயலாளர் காந்தி (மரியாம்பிள்ளை சௌந்தரநாதன்) என்பவர் “இங்கே நின்று சண்டை போட வேண்டாம்” என்று உபயகாரரிடம் கூறியுள்ளார், தான் கொண்டுவந்த பூவை தன்னிடமே திருப்பி தருமாறு உபாயகாரர் கேட்ட போதும் செயலாளர் அதை திருப்பி தரமுடியாது என்று கூறியுள்ளார். உங்களால் என்ன முடியுமோ அதை செய் என்றும் கூறியுள்ளார். மேலும் இங்கே நின்றால் பிரச்சனைகள் வரும் என்றும் சொன்னார்கள். இந்தக் குப்பையை (கார்த்திகைப் பூவினை) இங்கு பயன்படுத்தி விட்டு அப்புறம் ஸ்ரீலங்கா தூதரகம் இதுபற்றி எம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது எனவும் கூறினர்.

இறுதியில், துப்பரவு செய்யும் பொருட்களோடு மறைத்து வைக்கப்பட்டிருந்த அலங்காரத்தை எடுத்துவந்து ஆலயத்திற்கு வெளியிலே போட்டு விட்டனர். கடைசிவரையில் அந்த உபயகாரர் கைகளில் கொடுக்கவே இல்லை.

மேலும் அங்கே நடந்தவற்றை வீடியோ பதிவு செய்த மக்களிடம் இருந்து தொலைபேசிகளை பறித்து ஆதாரங்களை நீக்கினார் ஆனந்தன் தர்மலிங்கம் .இருந்தும் எம்மிடம் இவற்றுக்கான பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

* எம் அன்பார்ந்த கனடிய தமிழ் உறவுகளே உயிருக்குயிராய் நீங்கள் நேசிக்கும் மாவீரர்களை பூசிக்க நீங்கள் பயன்படுத்தும் வணக்கத்திற்குரிய கார்த்திகைப்பூ, இந்த துரோக கும்பலுக்கு இப்போ குப்பையாக தெரிகிறது என்றால்!!

*கறையான் புற்று எடுக்க கருநாகம் குடி கொண்டது போல், தமிழர்கள் கட்டிய ஆலயத்தில் அறங்காவல் சபை என்னும் பெயரில் ஊடறுத்து, தமிழ், தமிழினப் படுகொலை செய்த சிங்களவனுக்கு சேவகம் செய்யும், நம் தேசிய உணர்வினை சிங்களவனுக்கு காட்டிக் கொடுப்பதோடு, அவன் போடும் எலும்புத் துண்டுக்காக எம் இனத்தை காட்டிக் கொடுக்கும் இந்த கயவர்களை, கோடரிக் காம்புகளை கிளர்ந்தெழுந்து ஜனநாயக வழியில் அடித்து விரட்ட முன்வாருங்கள்.

* சம்பந்தப்பட்ட அயோக்கியர்களை அந்த ஆலயத்தின் பரிபாலன நடவடிக்கைகள் இருந்து அப்புறப்படுத்தும் வரை அந்த ஆலய தரிசனத்தை புறக்கணியுங்கள்!

* தமிழர் நாம் கொடுத்த பணத்தில் கோயில் கட்டி, கோடியில் புரளும் இவர்களுக்கு ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு பதில் சொல்ல வேண்டிய தேவை என்ன? இந்தக் கேள்வியை ஒவ்வொரு தமிழனும் இவர்களிடத்தே எழுப்புங்கள்!!!

* தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமிழினத் துரோகிகளாக மாறி கொண்டிருக்கின்றார்கள், அதேவேளை நம் கனடிய மண்ணிலும் ஆலய ஆன்மீ கவாதிகளும் துரோகிகளாக உருமாறி விட்டார்கள்.!

இத்தகைய துரோகங்கள் அனைத்தையும் தமிழர் நாம் ஒன்றுபட்டு முளையிலேயே கிள்ளி எறிவோம்.

இனவுணர்வு, தன்மான உணர்வு உலக மட்டத்தில் கனடிய தமிழர் நாம் கொண்டிருக்கும் முதன்மை பாத்திரத்தை தொடர்ந்தும் தக்க வைப்போம்!! தொடர்ந்து நம் வருங்கால சந்ததிக்கும் இதை கடத்துவோம்!

ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை!!
ஒழியட்டும் துரோக நரிக்கூட்டம்!!!
-கனேடியா வாழ் இனஉணர்வு மிக்க தமிழர்கள்-

இவ் ஆலய தொலைபேசி இலக்கம்…+1 (416) 321-6104
அறங்காவலர் சபை தொடர்பு இலக்கம்…+1 (416) 321-7558
மின்னஞ்சல்…[email protected]

You might also like

Leave A Reply

Your email address will not be published.