;
Athirady Tamil News

“பிட்சை புகினும், கற்கை நன்றே” திருமதி. கமலவேணி அவர்களின் கருணையில், “M.F” ஊடாக “ஏழையின் இதயம் குளிர்ந்தது”.. (படங்கள் & வீடியோ)

0

“பிட்சை புகினும், கற்கை நன்றே” திருமதி. கமலவேணி அவர்களின் கருணையில் “M.F” ஊடாக, ஏழையின் இதயம் குளிர்ந்தது.. (படங்கள் & வீடியோ)

###########################
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை கேள்விப்பட்டு அலுவலகத்திற்கு வந்த இரண்டு ஏழைக் குடும்பங்களின் கண்ணீர்க் கதையினைக் கேட்ட புலம்பெயர் சுவிசில் வாழும் கழகத்தோழர் சித்தா என அழைக்கப்படும் சதாசிவம் சித்திரவேல் அவர்களின் மனைவியான திருமதி. கமலவேணி சித்திரவேல் அவர்கள் தனது சொந்த பணத்தில், அந்த குடும்பத்தின் பிள்ளைகள் பாடசாலை செல்வதற்கு வசதியாக துவிச்சக்கர வண்டிகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வழங்கியுள்ளார்.

வவுனியா அளுத்கம அலகல்ல என்னும் சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மேற்படி கிராமத்தின் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களான அனோமா, பிரியாங்கினி ஆகிய இருவரும் கிராமங்களில் அலைந்து திரிந்து கிடைக்கும் தருமத்தில் தமது சீவியத்தை நடத்துவதோடு தமது பிள்ளைகளை படிக்க வைத்துள்ளனர்.

அனோமா கணவர் இல்லாதவர், கணவரால் கைவிடப்பட்ட மூத்த மகளோடு பேரப்பிள்ளைகளையும் மற்றைய இரு மகன்களையும் மேற்படி கிராமங்களில் கிடைக்கும் தருமத்தைக் கொண்டு பசியும் பட்டினியுமோடு வாழ்நாளை கடத்தி வருகின்றார். இவரின் மகன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் படிக்கின்றார்.

பிரியாங்கினி இவரின் கணவர் நிரந்தர நீரழிவு நோயாளி எழுந்து நெடுதூரம் நடக்கவோ, வேலை செய்யவோ இயலாதவர். படுத்த படுக்கையோடு காலத்தை கடத்துகிறார். இவர்களுக்கு 14, 12, 10 வயதில் மூன்று பிள்ளைகள். பாடசாலைக்கு நடந்தே போகின்றனர்.

இவர்கள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையே மூன்று கிலோ மீற்றர் தூரமாகும். அத்துடன் இவர்களுடைய வீடு குடியிருப்பதற்கு ஏற்றது அல்ல, வீடு பாழடைந்து எந்நேரமும் விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது. வீட்டின் ஒரு பகுதி ஏற்கனவே பாதி விழுந்து விட்டது

இந்நிலையில் இவர்கள் இருவரும் எமது அலுவலகத்தை தேடி தமது வறுமையினை கண்ணீர் விட்டு கதறி அழுது சொன்ன போதும் உதவி என எதுவும் கேட்கவில்லை. அவர்களின் மிக முக்கியமான கவலையாக இருந்தது “தமது பிள்ளைகள் நடந்து பாடசாலைக்கு போகின்றனர், அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?” எனக் கேட்டனர்.

இதை வீடியோ பதிவின் மூலம் புலம்பெயர் உறவுகளுக்கு நாம் தெரியப்படுத்திய போது, மட்டக்களப்பு கரவெட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் செங்காலனில் வசிப்பவருமான புளொட் தோழர் சித்தா என அழைக்கப்படுபவருமான திரு.சதாசிவம் சித்திரவேல் என்பவரின் துணைவியான திருமதி.கமலவேணி சித்திரவேல் அவர்கள், தானாக விரும்பி இவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் உதவி செய்ய முன்வந்தார்.

ஆரம்பத்தில் அனோமா அவர்களின் மகனுக்கு சையிக்கிளும் மற்றவரின் குடும்பத்திற்கு ஒரு தொகை பணமும் என்றே உதவி தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் சந்திமல் அவர்கள் தனது பிள்ளைக்கும் சையிக்கிள் தந்தால் பேருதவியாக இருக்கும் எனக் கூறியதை, நாம் திருமதி சித்திரவேல் கமலவேணி அவர்களிடம் எடுத்துக் கூறினோம். அவரும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் இரண்டு குடும்பங்களுக்கும் தனது சொந்தமான நிதியில் இரண்டு துவிச்சக்கர வண்டியினை வழங்கியுள்ளார்.

இன்றைய தினத்தில் (29.01.2021) வவுனியா பிரதேச செயலகத்தில் வைத்து வவுனியா பிரதேச செயலாளர் கௌரவ திரு. கமலதாசன் அவர்களால் குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் தாயாருடன் வருகை தந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்திகழ்வில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” தலைவர் திரு.திருக்கேஸ்வரன் சுஜீவன், நிர்வாக சபை உறுப்பினர் திருமதி டிலக்‌ஷன் சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டனர். “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பிரதம ஆலோசகர்களில் ஒருவரான திரு. மாணிக்கம் ஜெகன் அவர்கள் இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தார்..

பிரதேச செயலகத்தில் முக்கியமான கலந்துரையாடலில் இருந்த பிரதேச செயலாளர் குறித்த நேரத்தில் வருகை தந்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கியது மட்டுமன்றி அந்த சிங்கள தாய்மாருடன் சிங்கள மொழியில் உரையாடி அவர்களின் பிரச்சினை, தேவைகள் பற்றியும் அறிந்து கொண்டு, மேலதிகமான தகவல்களை தனக்கு அறியத்தருமாறு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரிடம்” வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது வேலைப்பணிக்கு மத்தியிலும் குறித்த நேரத்தில் வருகை தந்த பிரதேச செயலாளர் திரு. கமலதாசன் அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை நேரகாலத்துடன் வந்த இரண்டு குடும்பங்களுக்கும் உணவும், போக்குவரத்துக்காக ஒரு தொகைப் பணமும் கொடுக்கப்பட்டது. இறுதியாக மாணவர்கள் தனித்தனியே திருமதி. கமலவேணி சித்திரவேல் அவர்களுக்கும், இவற்றை முன்னின்று ஏற்பாடு செய்து தந்த “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும்” நன்றி சொன்னதோடு, அவர்களின் அம்மாக்களும் தங்கள் அன்பை கண்ணீரோடு வெளியிட்டார்கள்.

“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

29.01.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” தேடி வந்த சிங்களத் தாய்மார்கள்.. (படங்கள் & வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.