;
Athirady Tamil News

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள்

0

கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் Toronto நகர சபைக்கான இடைத் தேர்தல் ஒன்றை வியாழக்கிழமை (22) அறிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அறிவித்துள்ளனர்.

Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளியிட்டுள்ளனர்.

அனு ஸ்ரீஸ்கந்தராஜா தற்போது Scarborough-Rouge Park தொகுதிக்கான Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலராக பணியாற்றுகின்றார். நீதன் சான் தற்போது Toronto நகர பாடசாலை வாரிய தலைவராக உள்ளார்.

இந்தத் தொகுதிக்கான வேட்புமனுக்கள் June 23 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரியவருகிறது.

September அல்லது October ஆரம்பத்தில் வாக்களிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் $550,000 செலவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.