;
Athirady Tamil News

சுவிஸ் நாட்டவரான ஜீன் பியரி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்கள் கொண்டாட்டம்.. (படங்கள் & வீடியோ)

0

சுவிஸ் நாட்டவரான ஜீன் பியரி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்கள் கொண்டாட்டம்.. (படங்கள் & வீடியோ)

சுவிஸ் நாட்டவரான ஜீன் பியரி அவர்களின் பிறந்த நாளில் சிறுவர்கள் கொண்டாட்டம்.
#################################
சுவிஸ் நாட்டவரான திரு.ஜீன் பியரி அவர்கள் தனது தொண்ணூறாவது பிறந்தநாளை இலங்கையிலுள்ள எமது தாயக சொந்தங்களோடு குறிப்பாக தாயக சிறுவர்களோடு மிக குதூகலமாக கொண்டாடினார்.

தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சமூக சேவையினை சுவிஸ் நாட்டில் வாழும் தனது நண்பர்களான திரு.திருமதி.குணரட்ணம் தயாளினி ஆகியோர் மூலமாகவும், இணையதளங்கள் மற்றும் முகப்புத்தக வாயிலாகவும் நன்கறிந்து அதனால் ஈர்க்கப்பட்டு இவ்வாறான பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானும் உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு” தொடர்பு கொண்டு மேலதிக பல தகவல்களை பெற்றுக் கொண்ட பின்..

தனது தொண்ணூறாவது பிறந்த நாளான நேற்றைய தினத்தில் கிராமங்களில் வாழும் சிறுவர்களோடு கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டிசைத்து மிக குதூகலமாக சந்தோசமாக கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வருகை தந்த சிறுவர் பெரியோர்கள் அனைவருக்கும் பிறந்தநாள் கேக் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது.

அதுமட்டுமன்றி வவுனியா கல்மடு முல்லைக் குளம் கிராமத்தில் வசிக்கும் நல்லதம்பி ரவிச்சந்திரன் என்னும் மிகவும் ஏழ்மை நிலையில் வசிக்கும் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான கோழி வளர்ப்பிற்கான பெரிய கூட்டினையும், கோழிகளையும் தனது பிறந்தநாள் பரிசா வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக நிதிப்பங்களிப்பு தந்துள்ளார்.

கொரோனா தொற்று நோய் காரணமாக பயணத்தடை நாட்டில் அமுல்படுத்தப் பட்டிருப்பதால் வெகுவிரைவில் கோழிக் கூடு வழங்கி வைக்கப்பட இருக்கிறது.

ஏழை எளியோர்க்கு உதவுவதற்கு வயதொன்றும் தடையில்லை என்பதை தனது பிறந்த நாளில் நிகழ்த்துக் காட்டிய ஜீன் பியரி அவர்களுக்கு தாயக சொந்தங்கள் சார்பிலும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

21.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.