;
Athirady Tamil News

“அபி, அனு” இரட்டைச் செல்விகளின் பிறந்தநாளில், உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.. (வீடியோ படங்கள்)

0

“அபி, அனு” இரட்டைச் செல்விகளின் பிறந்த நாளில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.. (வீடியோ படங்கள்)
################################

சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகளின் “அபி, அனு” இரட்டை செல்விகளின் பிறந்தநாளில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. முன்னதாக இரட்டைப் புதல்விகளான அபி, அனு ஆகியோரின் பிறந்த நாள் நிகழ்வு தாயகப் பகுதியில் ஒரு கிராமத்தில் விசேடமாக ஒழுங்கு செய்யபபட்ட இடத்தில் தாயக உறவுகள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களோடு கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திரு திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க அவர்களின் நிதிப் பங்களிப்பில் கொரோனா தொற்று நோய் காரணமாக போடப்பட்ட பயணத்தடை காரணமாக மிகவும் பாதிப்புக்குள்ளான வவுனியா சிதம்பரபுரம், கற்குளம் போன்ற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் பிறந்த நாள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.

திரு. திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் தமது இரட்டைப் புதல்விகளின் பிறந்தநாளில் தமது நிதிப் பங்களிப்பில் கொரோனா தொற்று நோய் காரணமாக அன்றாட தொழில் வாய்ப்புக்களை இழந்த குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பங்கள், நோய்வாய்ப்பட்ட வயோதிபக் குடும்பங்கள், பெற்றோர் இல்லாத குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்கள் என பல தரப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” கேட்டுக் கொண்டதிற்கிணங்க வவுனியா கிராமங்களில் உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

திரு திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் தொடர்ந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” தொடர்ச்சியாக பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்

அந்தவகையில் இரட்டைச் செல்வங்களான அபி, அனு ஆகியோரின் பிறந்தநாளில் பல குடும்பங்களுக்கு அவர்களின் இல்லம் சென்று உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

பிறந்தநாள் கொண்டாடும் செல்விகள் பல்கலையும் கற்று சீறும் சிறப்புமாக வாழ தாயக உறவுகளோடு, “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

27.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.